"கேளுடி!"
"காதல் இனிமையானதுன்னு சொல்றாங்களே, உண்மையா?"
"ஏண்டி, ஒத்தரைக் காலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அவரோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வியைக் கேக்கற?"
"இப்ப நீ சந்தோஷமா இருக்கியா?"
"இப்ப மட்டும் இல்ல, எப்பவுமே சந்தோஷமாத்தான் இருக்கேன். ஏன் உனக்கு இந்த சந்தேகம்?"
"உன் கணவர் வெளியூருக்குப் போயிருக்காரே, அவரைப் பிரிஞ்சு இருக்கறதால, இப்ப நீ வருத்தமாத்தானே இருக்கணும்?"
"காதலரைப் பிரிஞ்சு இருந்தா வருத்தமாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே!"
"சில பே அப்படி இருக்கறதைப் பாத்திருக்கேன்."
"அவங்களுக்குக் கல்யாணம் ஆகி இருக்காது!"
"அப்படின்னா?"
"நான் காதலிச்சவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அவரோட இல்லற சுகத்தை அனுபவிச்சப்பறம், அந்த சுகத்தோட இனிமை மனசில எப்பவுமே இருந்துக்கிட்டிருக்கு. என் கணவர் இல்லாதப்ப, அவரை நினைக்கும்போதெல்லாம், அந்த இனிமையான நினைவுதான் மனசில வருது. அதனால, அவரைப் பிரிஞ்சிருக்கறப்பவும், அந்த நினைவிலேயே நான் சந்தோஷமா இருக்கேன். ஆமாம், நீ ஏன் இப்ப இதைப் பத்திக் கேக்கற?"
"நான் ஒத்தரைக் காதலிக்கறேன். ஆனா, அதை இன்னும் அவர்கிட்ட சொல்லல. காதல்ல, பிரிவுத் துன்பம் ரொம்பக் கொடுமையானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான், இந்தக் காதலை வளர விடறதுக்கே பயமா இருக்கு. அதான் உங்கிட்ட கேட்டேன்."
"தைரியமா உன் காதலை முன்னே எடுத்துக்கிட்டுப் போ. எப்போதாவது உன் காதலரை நீ பிரிய வேண்டி இருந்தாலும், அவரோட நினைவு உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்!"
கற்பியல்
நினைந்தவர் புலம்பல்
பொருள்:
தான் விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின்போது வரக் கூடிய துன்பம் வருவதில்லை எனவே, எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.
No comments:
Post a Comment