"உனக்குத் தெரியுமே! நீயே இப்படிக் கேக்கற!" என்றாள் தேன்மொழி.
"உன் காதலைப் பத்தி எனக்குத் தெரியும்கறது உண்மைதான். ஆனா, நீ சோர்வா இருக்கறதுக்குக் காரணம் எனக்குத் தெரியாதே!"
"என்னைப் பாத்தா, சோர்வா இருக்கற மாதிரியா இருக்கு?"
"அப்படி இருக்கறதாலதான் கேக்கறேன்!"
"நீயும் ஒத்தரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவதானே? உனக்குத் தெரியாதா, காதல் நோயைப் பத்தி? காதலரைப் பாக்க முடியலேன்னா, அதனால ஏற்படற ஏக்கம், மனத்துன்பம் பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதா?"
"எனக்குத் தெரியும். ஆனா, உன்னைப் பத்தி மத்தவங்க எங்கிட்ட கேக்கறப்ப, எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. அதான் உங்கிட்ட கேட்டேன்!" என்றாள் பரிவாதினி.
"மத்தவங்க உங்கிட்ட கேட்டாங்களா? அது எப்படி? நான்தான் என் காதல் நோயை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்கேனே! அது எப்படி மத்தவங்களுக்குத் தெரிஞ்சது?"
"போடி முட்டாள்! மறைச்சு வச்சுருக்கறதா நீ நினைச்சுக்கிட்டிருக்க! மறைச்சு வச்சா, நோய் இன்னும் அதிகமாகி இன்னும் அதிகமா வெளியில தெரியும். நெருப்பை மடியில வச்சுக் கட்டிக்கிட்டா, அது அணையுமா என்ன? இன்னும் பெரிசா எரிஞ்சு, உடையிலேயும் பத்திக்கிட்டு, உன்னை அதிகமா வாட்டறதோட, மத்தவங்களுக்கும் வெளிக்காட்டிடும் இல்ல? காதல் நோயை மறைச்சாலும் அப்படித்தான் நடக்கும். நான் அனுபவிச்சிருக்கேனே!" என்றாள் பரிவாதினி, பெருமூச்சுடன்.
கற்பியல்
பொருள்:
என் காதல் நோயைப் பிறர் அறியக் கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும், இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல், மறைக்க மறைக்க என் நோயும் பெருகவே செய்கிறது.
No comments:
Post a Comment