"நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தண்டி. மறந்துடாதே!" என்றாள் ரேணுகா.
"மறக்கறதாவது? நீ எப்பவுமே மறக்க முடியாத அளவுக்கு நாளைக்கு உன்னைக் கலாய்க்கறதுக்குத் திட்டமெல்லாம் தயாரா வச்சிருக்கேன்! இவளை ஏன் கூப்பிட்டோம்னு நீ அழப் போற பாரு!" என்றாள் நிகிதா.
மறுநாள் நிச்சயதார்த்தத்தின் போது, நிகிதா தான் சொன்னபடியே, தன் தோழி ரேணுகாவை ஏகமாக கலாட்டா செய்தாலும், ரேணுகாவுக்கு அது ஒரு உற்சாகமான அனுபவமாகவே இருந்தது.
நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த தன் அலுவலக நண்பர்களை நிகிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ரேணுகா. அவர்களில் பலர் திருமணமானவர்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர்தான் - சினேஹா, முகேஷ்.
சினேஹாவிடம் மட்டும் நிகிதா அதிகம் பழகியதை ரேணுகா கவனித்தாள். முகேஷ் தனியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். பொதுவாக எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நிகிதா தனியாக உட்கார்ந்திருந்த முகேஷிடம் சற்றுப் பேசிக் கொண்டிருந்தால், அவன் தனிமையாக உணர்ந்திருக்க மாட்டானே என்று நிகிதாவுக்குத் தோன்றியது.
சில வாரங்களுக்குப் பிறகு நிகிதாவுக்கும், முகேஷுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாக அறிந்து ரேணுகா ஆச்சரியப்பட்டாள்.
"எப்போடீ நிச்சயமாச்சு?" என்று நிகிதாவிடம் கேட்டாள் ரேணுகா.
:"கல்யாணம் நிச்சயமானது இப்பதான்..." என்று இழுத்தாள் நிகிதா.
"அப்படீன்னா?" என்றாள் ரேணுகா.
"நாங்க ரொம்ப நாளாப் பழகிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நிகிதா.
"அடிப்பாவி! ரொம்ப நாளாக் காதலிக்கிறீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்ற ரேணுகா, சட்டென்று நினைவு வந்தவளாக, "ஆமாம், என் நிச்சயதார்த்தத்தில உன்னை நான் முகேஷுக்கு அறிமுகப் படுத்தினேன். அப்ப நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே அறிமுகமானவங்க மாதிரி காட்டிக்கல. அதோட ரெண்டு பேரும் பேசிக்கக் கூட இல்ல. சம்பந்தம் இல்லாதவங்க மாதிரி ஒதுங்கி இருந்தீங்க?" என்றாள்.
"பின்னே, எல்லார் முன்னேயும் நாங்க காதலர்கள்னு காமிச்சுக்கணும்னு சொல்றியா?" என்றாள் நிகிதா.
காமத்துப்பால் "மறக்கறதாவது? நீ எப்பவுமே மறக்க முடியாத அளவுக்கு நாளைக்கு உன்னைக் கலாய்க்கறதுக்குத் திட்டமெல்லாம் தயாரா வச்சிருக்கேன்! இவளை ஏன் கூப்பிட்டோம்னு நீ அழப் போற பாரு!" என்றாள் நிகிதா.
மறுநாள் நிச்சயதார்த்தத்தின் போது, நிகிதா தான் சொன்னபடியே, தன் தோழி ரேணுகாவை ஏகமாக கலாட்டா செய்தாலும், ரேணுகாவுக்கு அது ஒரு உற்சாகமான அனுபவமாகவே இருந்தது.
நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த தன் அலுவலக நண்பர்களை நிகிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ரேணுகா. அவர்களில் பலர் திருமணமானவர்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர்தான் - சினேஹா, முகேஷ்.
சினேஹாவிடம் மட்டும் நிகிதா அதிகம் பழகியதை ரேணுகா கவனித்தாள். முகேஷ் தனியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். பொதுவாக எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நிகிதா தனியாக உட்கார்ந்திருந்த முகேஷிடம் சற்றுப் பேசிக் கொண்டிருந்தால், அவன் தனிமையாக உணர்ந்திருக்க மாட்டானே என்று நிகிதாவுக்குத் தோன்றியது.
சில வாரங்களுக்குப் பிறகு நிகிதாவுக்கும், முகேஷுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாக அறிந்து ரேணுகா ஆச்சரியப்பட்டாள்.
"எப்போடீ நிச்சயமாச்சு?" என்று நிகிதாவிடம் கேட்டாள் ரேணுகா.
:"கல்யாணம் நிச்சயமானது இப்பதான்..." என்று இழுத்தாள் நிகிதா.
"அப்படீன்னா?" என்றாள் ரேணுகா.
"நாங்க ரொம்ப நாளாப் பழகிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நிகிதா.
"அடிப்பாவி! ரொம்ப நாளாக் காதலிக்கிறீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்ற ரேணுகா, சட்டென்று நினைவு வந்தவளாக, "ஆமாம், என் நிச்சயதார்த்தத்தில உன்னை நான் முகேஷுக்கு அறிமுகப் படுத்தினேன். அப்ப நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே அறிமுகமானவங்க மாதிரி காட்டிக்கல. அதோட ரெண்டு பேரும் பேசிக்கக் கூட இல்ல. சம்பந்தம் இல்லாதவங்க மாதிரி ஒதுங்கி இருந்தீங்க?" என்றாள்.
"பின்னே, எல்லார் முன்னேயும் நாங்க காதலர்கள்னு காமிச்சுக்கணும்னு சொல்றியா?" என்றாள் நிகிதா.
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.
பொருள்:
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அந்நியர் போல் பார்ப்பது காதலர்களுக்கே உரித்தான இயல்பாகும்.
Read 'The Engagement Function' the English version of this story by the same author.
உங்கள் பதிவை TamilBMதிரட்டியில் இணைக்க
ReplyDeletehttps://bookmarking.tamilbm.com/member/myurl