"ஒண்ணுமில்லையே!" என்றான் நடராஜன்.
"சும்மா மழுப்பாதேடா! அந்தப் பொண்ணைப் பாத்ததிலேந்துதானே இப்படி இருக்கே?"
"தப்பு. அந்தப் பொண்ணைப் பாத்ததிலேந்து. இல்ல. அந்தப் பொண்ணு என்னைப் பாத்ததிலேந்து!"
"ரெண்டும் ஒண்ணுதானேடா?"
"எப்படி ஒண்ணாகும்? நாம எவ்வளவோ பெண்களை சைட் அடிக்கிறோம். பல பேரு நம்பளைத் திருப்பி பாக்கக் கூட மாட்டாங்க!"
"ஆனா அவ உன்னைப் பாத்துட்டாளாக்கும்?"
"பாக்கறதுன்னு சாதாரணமா சொல்ல முடியாதுடா அதை. ஒரு பெண்ணோட பார்வை ஈட்டி மாதிரி, அம்பு மாதிரி, வாள் மாதிரின்னெல்லாம் இலக்கியத்தில எழுதுவாங்க. அப்பல்லாம் அதைப் படிச்சு சிரிச்சுருக்கேன். ஆனா அந்தப் பொண்ணு என்னைப் பாத்ததும் உடம்பே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அன்னிலேந்து இன்னும் உடம்பு ஏதோ ஜுரம் வந்த மாதிரிதான் இருக்கு" என்றான் நடராஜன்
"அப்ப, அவளை மறுபடியும் போய்ப் பாத்துப் பேச வேண்டியதுதானே?"
"பயமா இருக்குடா. அவ ஒரு தடவை என்னைப் பார்த்ததே என்னை என்னவோ செய்யுது. மறுபடி ஒரு தடவை நான் அவளோட பார்வையைச் சந்திச்சா என்ன ஆகுமோ!"
"போடா..." என்றான் சபேசன் எரிச்சலுடன்.
சற்று தூரம் நண்பர்கள் பேசாமல் நடந்து சென்றனர்.
வழியில் ஒரு இடத்தில் ஒரு பாம்புப் பிடாரன் கையில் ஒரு பாம்பைப் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவனைத் தாண்டிச் சென்றதும் "பாம்பையெல்லாம் பிடிச்சுக்கிட்டுப் போய் அவங்க என்ன செய்வாங்க தெரியுமா?" என்றான் சபேசன்.
"வித்தை காட்டுவாங்க" என்றான் நடராஜன்.
"அது விஷம் இல்லாத பாம்பை வச்சு. விஷமுள்ள பாம்பா இருந்தா?"
"என்ன செய்வாங்க?"
"அதோட பல்லிலேந்து விஷத்தை எடுத்து வித்துடுவாங்க" என்றான் சபேசன்
"வித்துடுவாங்களா? யாருக்கு?"
"யாருக்குன்னு எனக்கு சரியாத் தெரியாது. ஆனா பாம்போட விஷத்தை எடுத்து பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்து தயார் செய்வாங்கன்னு தெரியும்."
"விஷத்திலேந்து விஷமுறிவு மருந்து தயாரிப்பாங்களா? ஆச்சரியமா இருக்கே!" என்றான் நடராஜன்.
"ஆமாம். இயற்கையிலே எல்லாமே அப்படித்தான். விஷத்தை முறிக்க விஷத்தைத்தான் பயன்படுத்தணும்!"
"அப்ப, நீ சொன்னது சரிதான். நான் இப்பவே அவளைப் போய்ப் பாக்கணும்!" என்றான் நடராஜன்.
"பாக்கணுமா? எதுக்கு?"
"அதாவது அவ மறுபடி என்னைப் பாக்கணும். அவ பார்வையாலே ஏற்பட்ட நோயை அவளோட இன்னொரு பார்வைதான் தீர்க்க முடியும்!"
சபேசனின் பதிலை எதிர்பார்க்காமல் நடராஜன் வேறு திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
பொருள்:
மை தீட்டிய இவள் கண்களில் இரண்டு வகைப் பார்வைகள் உள்ளன. ஒருவகைப் பார்வை நோயைக் கொடுக்கும். இன்னொரு வகைப் பார்வை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
பொருள்:
மை தீட்டிய இவள் கண்களில் இரண்டு வகைப் பார்வைகள் உள்ளன. ஒருவகைப் பார்வை நோயைக் கொடுக்கும். இன்னொரு வகைப் பார்வை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment